இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள், இரண்டு இணையதளங்களை அரசு முடக்கியுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் வலையமைப்பைச் சேர்ந்தவை.
மேலும், இந்தியா தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்களைப் பற்றி போலியான செய்திகளை பரப்பி வந்துள்ளது.
பல்வேறு தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் பிரித்தாளும் உள்ளடக்கத்தை இடுகையிட சேனல்கள் பயன்படுத்தப்பட்டன.
சேனல்களின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை
35 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
இந்த யூடியூப் சேனல்கள் விவசாயிகளின் போராட்டம் போன்ற பிரச்சனைகளின் உள்ளடக்கத்தையும் வெளியிட்டன.
Also Read Related To : Youtube | India | Social Media |
Government bans 20 YouTube channels!