சாம்சங் நிறுவனம் ரோலபிள் டிஸ்ப்ளே மற்றும் கேமராவைக் கொண்ட ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
96 பக்க காப்புரிமை ஆவணம்(Patent Document) உலக அறிவுசார் சொத்து அலுவலகத்தில் (WIPO) நிரப்பப்பட்டது.
பேட்டன்ட் இமேஜின்படி, கடிகாரத்தின் கிரீடத்தை அழுத்துவதன் மூலம் காட்சியை நீட்டிக்க முடியும்.
நீட்டிக்கப்படும் போது, கடிகாரத்தின் வெளிப்புற ஃப்ரேம் திரையை 40 சதவீதம் வரை விரிவுபடுத்துகிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
கேமரா அன்டர் டிஸ்பிளே(Under Display) கேமராவாக இருக்கும், மேலும் இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இந்த ரோலபிள் டிஸ்ப்ளே ஸ்மார்ட்வாட்சின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் அதன் அடுத்த பிரீமியம் ஃபிளாக்ஷிப் S22 சீரிஸ்ஸை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Also Read Related To : Samsung | Smart Watch | Gadgets |
Samsung’s new smartwatch coming soon!