தொழில்முறை நெட்வொர்க்கிங் தளத்தில் 21 நாட்களில் யூனிகார்னாக மாறிய ஆப்னா முடியாதது எதுவுமில்லை என்று கூறுகிறது.
வருடாந்திர வருவாயில் நிறுவனத்தில் பெரிய அளவு லாபம் ஈட்டாமலேயே யூனிகார்னாக இந்த நிறுவனம் மாற முடிந்தது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து நாட்டின் பொருளாதார சமநிலையை மக்கள் மீட்டெடுக்கத் தொடங்கியபோது அப்னா தனது யூனிகார்ன் பயணத்தைத் தொடங்கியது.
டைகர் குளோபல் தலைமையிலான சீரிஸ் சி நிதியில் 100 மில்லியன் டாலர்களை திரட்டிய பிறகு, பெங்களூருவை தளமாகக் கொண்ட ஆப்னா நிறுவனம் யூனிகார்ன் ஆனது.
நிர்மித் பரிக் என்பவரால் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய இடங்களில் தனது அலுவலகங்களை கொண்டுள்ளது.
இந்த தளமானது 50 லட்சம் பணிகள், 16 மில்லியன் பயனாளிகள் மற்றும் 150,000 SMB களைக் கொண்டுள்ளது.
இது ஒவ்வொரு மாதமும் 18 மில்லியன் இன்டர்வியூக்களை நடத்த நிறுவனங்களுக்கு உதவுகிறது.
பொறியாளரான பரிக், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில்(Stanford University) எம்பிஏ படித்தவர்.
ஆரம்பக் காலத்தில் தொடங்கிய நிறுவனங்களில் அவரால் வெற்றியைச் சுவைக்க முடியவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் அனைத்து நாட்டிலும் இருப்பதை புரிந்துகொண்டார் பரிக்.
இந்த புரிதல் அவரை புதிய நிறுவனத்தைத் தொடங்குவதை பற்றி சிந்திக்க வைத்தது.
பரிக் ஒரு சாதாரண பணியாளரின் காணோட்டத்தை அறிந்திருக்கிறார்.
ப்ளூ-கிரே காலர் பணியின் பல்வேறு கோணங்களை புரிந்து கொள்வதற்காக, அவர் எலக்ட்ரீஷியன், ஃபோர்மேன் மற்றும் ஷாப் ஃப்ளோர்மேன் என பணியாற்றினார்.
“நீங்கள் ஒரு பிரச்சனையை அனுபவிக்காத வரை, அதற்கு நல்ல தீர்வை உங்களால் கொடுக்க முடியாது.” இது பரிக்கின் பொன்மொழி.
பாலிவுட் திரைப்படமான கல்லிபாய் திரைப்படத்தில் வரக்கூடிய ‘அப்னா டைம் ஆயேகா…’, பாடல் தனது நிறுவனத்திற்கு ஆப்னா என பெயரிடத் துண்டியதாக பரிக் கூறுகிறார்.
ஆப்னா செயலியின் வளர்ச்சியின் போது பரிக் தனது நேரத்தை மும்பையில் உள்ள சேரிகளில், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள செலவிட்டார்.
இப்போது ஆப்னா உலகளவில் உள்ள தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த 2.3 பில்லியன் மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Also Read Related To : Unicorn | Apna | Startups |
How Apna became a unicorn in 21 months?