உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக பிளாஸ்டிக் மாறிக்கொண்டு வரும் நிலையில் ராஜஸ்தானில் திராஷ் டூ ட்ரெஷர்(Trash to Treasure) என்ற குழு அதை ஒரு வணிக தளமாக மாற்றியமைக்கிறார்கள் என்றால் அது பாராட்டுக்குரிய செயல் தானே.
17 வயதாகிய ஆதித்யா பேங்கர், ஜவுளி வியாபாரம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர், இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள மூளை.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களை மறுசுழற்சி செய்வதே இந்த கண்டுபிடிப்பின் பயன்பாடு.
ராஜஸ்தானில் மாயோ கல்லூரியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஆதித்யா ஜனவரி 2021ல் இந்த முயற்சியில் அடியெடுத்து வைத்தார்.
தினமும் அந்த குழு 10 டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து துணிகளாய் மாற்றுகிறார்கள் என்றால் வியக்க வைக்கும் ஒன்றாக பார்க்கக்கூடியவை தான். ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் தேவைப்படுகின்ற இந்த செயல்முறையில் காட்டன் துணிகளை விட ஆரோக்கியமான மற்றும் அழகான துணிகள் வெளிவருகின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, காஞ்சன் இந்தியா லிமிடெட்(Kanchan India Ltd) உரிமையாளரான தனது மாமாவுடன் சீனா(China) பயணித்த ஆதித்யா, ஜவுளி துறையில் புதிய தொழில்நுட்பங்களை காணும் விதமாக ஒரு பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை துணிகளாய் மாற்றியமைப்பதைப் பார்த்தார்.
இது குப்பை கிடங்குகளில் குப்பை கொட்டுவது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்கி, உள்நாட்டின் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்தார் ஆதித்யா.
இந்தியா திரும்பியதும் இதே முயற்சியில் ஈடுபட விரும்பிய ஆதித்யா ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் பில்வாராவில் ஒரு குழுவை அமைத்தார்.
காஞ்சன் நிறுவனம் இந்த திட்டத்திற்கான உதவித்தொகையை வழங்கியது.
ஜனவரி 2021ம் வருடம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கத் தொடங்கினார்கள் ஆதித்யாவின் குழு.
முதிலில் ரீஜினல் மையங்களிலிருந்து PET கிரேடு பிளாஸ்டிக் பொருட்களை 40 ரூபாய்க்கு வாங்கினார்கள்.
அவை பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு முன் சுத்தம் செய்யப்பட்டு வரகூடியவை என்றுக் கூறுகிறார் ஆதித்யா. PET தரமான பிளாஸ்டிக் பொருட்களை பங்களிப்பதன் மூலம் ட்ராஷ் டூ ட்ரெஷர்( Trash to Treasure) குழுவை ஆதரிக்க விரும்பினால், அவர்களது இன்ஸ்டாகிராம்(Instagram) பக்கத்தை அனுகலாம். உதாசன படுத்தக்கூடிய கழிவுகள் கூட வேலைவாய்ப்பையும் பணத்தையும் தரக்கூடும் என்பதற்கு உதாரணம் இந்த ட்ராஷ் டூ ட்ரெஷர்( Trash to Treasure).
Also Read Related To : Trash To Treasure | Startup | Entrepreneurs |
Trash To Treasure Startup Story.